இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்- நெகிழ்ச்சி சம்பவம்

Kerala
By Karthikraja Sep 16, 2025 07:25 AM GMT
Report

இந்து பெண்ணுக்கு இஸ்லாமியர் இறுதிச்சடங்கு செய்த விடயம் இணையத்தில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்து பெண் உயிரிழப்பு

இந்தியா உலக அரங்கில் மதசார்பற்ற நாடாக விளங்கி வருகிறது. அதற்கான சமீபத்திய சான்றாக கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 44 வயதான ராகி( Rakhi) என்ற பெண், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள குதிரவட்டம் மனநல மையத்தில் முதலில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்து பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்- நெகிழ்ச்சி சம்பவம் | Kerala Muslim Man Did Last Rituals For Hindu Girl

அங்கு சற்று குணமடைந்ததும், திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில், லத்தீன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் பெனடிக்ட் மென்னி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்: இரும்புத் தடியால் அடித்து கொன்ற காதலன்: ஏன்?

காதலனுக்காக 600 கி.மீ பயணித்த பெண்: இரும்புத் தடியால் அடித்து கொன்ற காதலன்: ஏன்?

அவர் மரணிப்பதற்கு சில காலத்திற்கு முன்னர், தனக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என அங்குள்ள கன்னியாஸ்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு தன்னுடைய குடும்பத்தினர் குறித்த எந்த நினைவும் இல்லை. இதனால், மனநல மைய ஊழியர்களால், அவரின் பெயர் மற்றும் சொந்த மாநிலம் தவிர எதையும் கண்டறிய முடியவில்லை.

இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்

ராகியின் இறுதி ஆசை குறித்து, மனநல மையத்திற்கு அடிக்கடி வந்து அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறி வரும் கதினம்குளம் பஞ்சாயத்தில் உள்ள சித்தட்டுமுக்கு வார்டு கவுன்சிலர் சஃபீர் என்பவரிடம் இதனை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சஃபீர் ராகியின் மகன் என்ற நிலையில் இருந்து, ஹிந்து முறைப்படி அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

சஃபீருக்கு இது முதல்முறை இல்லை. கடந்த 2 வாரத்திற்கு முன்னர் இதே போல் உயிரிழந்த இந்து மதத்தை சுதக்ஷினா என்ற பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

இது குறித்து பேசிய சஃபீர், யாரேனும் ஒருவர் தனது கடைசி ஆசையை சொல்லும் போது, ​​நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். அதைதான் எனது மதம் எனக்கு போதித்துள்ளது. நான் சரியாக செய்தேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது எந்தக் கடவுளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன்.

ஓரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இந்திய பெண்

ஓரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இந்திய பெண்

தகன கூடத்தில் இருந்த ஊழியர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். நான் இது குறித்து எனது ஜாமத்தில் உள்ள இமாமிடம் தெரிவித்த போது, இறந்த ஒருவரை உங்கள் சொந்தமாகக் நினைத்து நீங்கள் சரியானதைச் செய்தீர்கள் என பாராட்டினார்.

என் இளவயதில் ​​இதுபோன்ற செயல்கள் பொதுவானவை; யாரும் இவற்றை சிறப்பு என்று நினைத்ததில்லை. இப்போது, ​​மதச்சார்பின்மை ஒரு அரிதான விடயமாகிவிட்டதால், மனிதாபிமானம் கொண்ட ஒன்றைச் செய்யும்போது, ​​அது கவனத்தை ஈர்க்கிறது" என கூறினார்.

2023 ஆம் ஆண்டில், தி கேரள ஸ்டோரி என்ற பெயரில் வெளியான திரைப்படம், கேரளாவை சேர்ந்த இஸ்லாமியர்களை மதசார்பின்மையற்ற தவறானவர்களாக சித்தரித்தது. தற்போது இந்த விடயம் குறித்து அறிந்த நெட்டிசன்கள் இதுவே உண்மையான கேரள ஸ்டோரி என சஃபீரை பாராட்டி வருகின்றனர். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US