நாவூறும் சுவையில் மொறுமொறு நேந்திரன் சிப்ஸ்.., எப்படி செய்வது?
பொதுவாக கேரளா உணவுகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.
கேரளாவின் பிரபலமான நேந்திரன் சிப்ஸ் டீயுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் கேரளா நேந்திரன் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நேந்திரன் வாழைக்காய்- 2
- தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்
- உப்பு- 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் நேந்திரன் வாழைக்காயை தோல் உரித்து தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
பின் சிறிய பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.
அடுத்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி சிப்ஸ் கட்டர் வைத்து நேந்திரன் வாழைக்காயை தேய்க்கவும்.
பின்னர் மிதமான தீயில் வைத்து சீவிய வாழைக்காயை பொரிக்கவும்.
இதற்கடுத்து மஞ்சள் கலந்து வைத்த தண்ணீரில் ஸ்பூனில் எடுத்து கடாயில் ஊற்றவும்.
மிதமான சூட்டில் 5-6 நிமிடங்களுக்கு நேந்திரன் சிப்ஸை வறுத்து வந்ததும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
இறுதியாக நன்கு ஆறியதும் எடுத்து சாப்பிட்டால் மொறுமொறு நேந்திரன் சிப்ஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |