கேரளா ஓணம் பம்பர் 2026: ரூ.30 கோடி பரிசில், வரி போக வென்றவர் எவ்வளவு பெறுவார்?
Kerala Lottery Onam Bumper 2026- how much Prize money winners will take home after taxes: கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.30 கோடி பரிசு வென்றவர், வரி மற்றும் மற்ற பிடித்தம் போக எவ்வளவு தொகையை பெறுவார் என்பதை இங்கே பார்க்கலாம்.
கேரளா மாநிலத்தின் ஓணம் திருவோணம் பம்பர் லாட்டரி 2026 முடிவுகள் வெளியிடப்பட்டு, இந்த ஆண்டின் முதல் பரிசு தொகை ரூ.30 கோடி என அறிவிக்கப்பட்டது. இது வரலாற்றில் மிக உயர்ந்த பரிசுத் தொகையாகும்.

வெற்றியாளர் பெறும் தொகை சுமார் ரூ.15.45 கோடி
ஆனால், வெற்றியாளர் முழுமையாக ரூ.30 கோடியை பெற முடியாது. வரி மற்றும் முகவர் கமிஷன் காரணமாக, அவருக்கு கிடைக்கும் தொகை குறையும்.
முதலில், 10 சதவீதம் முகவர் கமிஷன் கழிக்கப்படும். அதன் பிறகு 30 சதவீதம் வருமானவரி, 37 சதவீதம் சர்சார்ஜ், மற்றும் 4 சதவீதம் கல்வி-சுகாதாரச் செஸ் விதிக்கப்படும். இதனால், வெற்றியாளர் பெறும் தொகை சுமார் ரூ.15.45 கோடி ஆகும்.
இரண்டாம் பரிசு ரூ.1 கோடி. இதற்கும் அதே விதமாக கழிப்புகள் செய்யப்பட்டு, வெற்றியாளர்கள் சுமார் ரூ.59.11 லட்சம் பெறுவார்கள். மூன்றாம் பரிசு ரூ.25 லட்சம். இதற்கான தொகை சுமார் ரூ.15.48 லட்சம் ஆகும்..
இந்த ஆண்டின் ஓணம் பம்பர் லொட்டரியில் மொத்தம் 5,34,670 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த பரிசுத் தொகை ரூ.125.54 கோடி.
முதல் பரிசு: ஒரே ஒரு வெற்றியாளர் - ரூ.30 கோடி.
இரண்டாம் பரிசு: 20 பேருக்கு - ரூ.1 கோடி.
மூன்றாம் பரிசு: 20 பேருக்கு - ரூ.25 லட்சம்.
நான்காம் பரிசு: 10 பேருக்கு - ரூ.5 லட்சம்.
ஐந்தாம் பரிசு: 10 பேருக்கு - ரூ.2 லட்சம்.
ஆறாம் பரிசு: 54,000 பேருக்கு - ரூ.5,000.
ஏழாம் பரிசு: 81,000 பேருக்கு - ரூ.2,000.
எட்டாம் பரிசு: 1,24,200 பேருக்கு - ரூ.1,000.
ஒன்பதாம் பரிசு: 2,75,400 பேருக்கு - ரூ.500.
ஆறுதல் பரிசு: 9 பேருக்கு - ரூ.5 லட்சம்.
இந்த லொட்டரிக்கான டிக்கெட் விலை ரூ.500. மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |