ஆன்லைன் மூலம் பணம் பெற்றதால் நேர்ந்த விபரீதம்... 2 குழந்தைகளுடன் கணவன் மனைவி தற்கொலை!
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொச்சின் பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் ஒரு பெண்ணின் படத்தை பலருக்கு பகிர்ந்ததால் இந்த சம்பவம் நிகழ்துள்ளது.
நடந்தது என்ன?
கேரள மாநிலத்தில் கொச்சினில் கடம்பக்குடியை சேர்ந்த நிஜோ மற்றும் சில்பா தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்னர்.
இந்த தம்பதியினருக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தொலைப்பேசியில் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரம் மூலம் லோன் எடுத்து பணத்தை பெற்றுள்ளனர்.
இவர்கள் வாங்கிய கடனை சரியாக செலுத்தவில்லை என்று கடன்க்கொடுத்த செயில் நிறுவனம் நிஜோவின் புகைப்படத்தை மார்பிங் செய்து பலருக்கு பகிர்ந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை கொலை செய்து விட்டு, இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணை நடந்துக்கொண்டு இருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |