மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை - அரசு திட்டம்
மாணவிகளுக்கு 3 நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.
3 நாள் மாதவிடாய் விடுமுறை
கேரளாவில் வி.டி.சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு கடந்த மே 18 ஆம் திகதி பதவி ஏற்றது. நேற்று நடைபெற்ற கேரள சட்டமன்ற கூட்டத்தில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை ஆற்றினார்.

இந்த உரையில், பெண்களுக்கான உகந்த மாநிலமாக கேரளாவை மாற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த உரையில், மாதவிடாய் கண்ணியம் (Menstrual Dignity) என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் எனவும், விடுமுறை எடுக்கும் மாணவிகள் தவறவிட்ட பாடங்களை ஈடுசெய்ய வார இறுதி நாட்களில் சிறப்பு ஈடுசெய் வகுப்புகள் (Weekend catch up classes) நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு நலச் சட்டம் 1961இன் படி, அனைத்து பொது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், குழந்தைகள் பராமரிப்புக்கு உயர்தரமான பகல்நேர மையங்கள் செயல்படுவது கட்டாயமாக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில், பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு கட்டாயமாக்கப்படும்.
ஆதரவற்றோர் மற்றும் அனாதைகள் இல்லாத கேரளா' என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவிலேயே அனாதைகள் இல்லாத முதல் மாநிலமாக கேரளாவை மாற்றும் வகையில், குழந்தைகளில் தத்தெடுப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
ஜூன் 15 ஆம் திகதி முதல் மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |