புகார் அளித்த சிறுமியை குத்திய போக்சோ குற்றவாளி: கேரளாவில் அதிர்ச்சி
Kerala pocso offender stabs the girl who give the complaint: கேரளாவில் போக்சோ வழக்கில் பிணையில் வெளிவந்த கைதி புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளித்த சிறுமியை குத்திய போக்சோ குற்றவாளி
கேரளாவின் பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் என்ற 22 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் தன் மீது புகார் அளித்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த முகமது ஆதினன், சிறுமியை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
சிறுமியின் அழுகுரல் கேட்டு வீட்டிற்குள் வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் முகமது ஆதினனை தடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மீண்டும் கைது
தாக்குதலுக்கு பிறகு அங்கிருந்து தப்பியோடிய முகமது ஆதினன், காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நிலையில் அவரை சுற்றி வளைத்து பெரும்பாவூர் பொலிஸார் கைது செய்தனர்.
பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது அங்கிருந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது, மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் முடிந்த பிறகு மீண்டும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.