முதல் திருமணம் நிலைக்காது என்ற ஜோதிடர்! தாலி கட்டியவரை விஷம் வைத்து கொன்ற கேரளப்பெண்... பகீர் தகவல்கள்
கேரளாவில் கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக எல்லையோரம் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் (23) சமீபத்தில் உயிரிழந்தார். ஷாரோன், கிரீஷ்மா என்ற இளம் பெண்ணை காதலித்துள்ளார். கிரீஷ்மா கடந்த 14-ம் திகதி ஷாரோனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அவர் தனது நண்பரின் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நண்பர் வெளியே பைக்கில் காத்திருந்திருக்கிறார். ஷாரோன் தனியாக கிரீஷ்மாவின் வீட்டுக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வந்த ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார்.
நண்பர் ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக்கேட்டதற்கு, அவர் சரியாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டுக்குச் சென்றபிறகு அவரது உடல்நிலை மோசமானது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரீஷ்மா வீட்டில் ஜூஸ் குடித்ததாக ஷாரோன் மருத்துவமனையில் வைத்து கூறியதைத் தொடர்ந்து அவரின் தந்தை ஜெயராஜ் பொலிசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஷாரோன் உடலில் விஷம் சென்றுள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவர்கள் முதற்கட்டமாக தகவல் தெரிவித்தனர். ஷாரோனும் கிரீஷ்மாவும் வெட்டுக்காடு ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவதாக கிரீஷ்மா அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறப்படுகிறது.
கிரீஷ்மா-வுக்கு ஏற்கனவே வேறு நபருடன் நிச்சயம் ஆனதால், அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக ஷாரோனுக்கு ஜூஸ்-ல் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக ஷாரோன் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
பொலிசாரின் விசாரணையில் ஷாரோன் காதலியின் குடும்பத்திடம் ஜோதிடர் அந்தப் பெண்ணின் முதல் கணவன் உயிரிழப்பான் இரண்டாவது கணவருடன் மட்டும் தான் வாழ முடியும் என ஜாதகத்தை பார்த்து கூறியுள்ளார்.
இதை நம்பி தன்னுடைய குடும்பத்துடன் பக்காவாக பிளான் செய்த கிரீஷ்மா செய்த செயல் என்பது தெரிய வந்துள்ளது. ஷாரோன் -னுடன் - தான் நவம்பர் மாதம் வீட்டை விட்டு இறங்கி வருவதாக கூறி நம்ப வைத்து அவளின் கழுத்தில் தாலியையும் கட்ட வைத்துள்ளார்.
பின்பு வீட்டிற்கு அழைத்து வந்து முதலில் கஷாயம் ஒன்றை கொடுத்து விட்டு குளிர்பானம் ஒன்றையும் கொடுத்துள்ளார். காதலியை நம்பி ஷாரோனும் குடித்துள்ளார். இதனிடையில் தனது போட்டோக்கள் ஷாரோனிடம் இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஜாதக நம்பிக்கைப்படி கொலை செய்யப்பட்டாரா அல்லது உண்மையில் வேறு காரணமா என தீவிரமாக மீண்டும் விசாரித்து வருகின்றனர்.