கேரளா ஸ்பெஷல் உன்னியப்பம் செய்வது எப்படி?
உன்னியப்பம் கேரளாவின் பாரம்பரிய உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் கேரளா ஸ்பெஷல் உன்னியப்பம் செய்வது சுலபமான ஒன்று.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 3
கோதுமை மாவு – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
வெல்லம் – ஒரு கப்
சோடா மாவு – 1 சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
தேங்காய் – ஒரு கப்
எள்ளு – 1 ஸ்பூன்
முந்திரி – 10
செய்முறை
வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வெட்டிய வாழைப்பழங்கள்,கோதுமை மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வெல்லத்தை பாகு காய்ச்சவும் , பாகில் தூசி அதிகம் இருப்பின் அதை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அரைத்து வைத்த கலவையை,வெல்ல பாகில் சேர்த்து , அதனுடன் சிறிது சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
தேங்காய், எள்ளு, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
குழிப்பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தயார் செய்துவைத்துள்ள மாவை ஊற்றி உன்னி உன்னியப்பங்களை செய்ய வேண்டும்.
உன்னியப்பத்தை கோதுமைக்கு பதில் பச்சரிசி மாவு, மைதா என எதை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |