வெறுப்பை உமிழும் கேரளா ஸ்டோரி: ஒட்டு மொத்த சமூகத்தையே இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டு
இந்தியாவில் நேற்று வெளியான கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம், ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பிரபலங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரளா ஸ்டோரி திரைப்படம்
இந்திய இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தின் டிரைலர் வந்ததிலிருந்து பெரும் சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியது.
இது இஸ்லாம் சமூகத்தை இழிவுபடுத்துவதாகவும், மதச்சார்பற்ற கேரளாவின் மாண்பை சீரழிப்பதாகவும் பல எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் கேரள முதல்வர் பினராய் விஜயன் இப்படத்திற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இப்படம் வெளியானதால், நாடெங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் திரையரங்குகளின் முன் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும் தமிழகத்தின் சென்னை மாநகரிலுள்ள சத்யம் திரையரங்கு, முன்பிருந்த பேனரை கிழித்து முஸ்லீம் லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து படம் வெளியாகிய நிலையில் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கேரளா ஸ்டோரி படத்தின் கதை
கேரளாவின் வெவ்வேறு பகுதியிலிருந்து செவிலியர் படிப்பிற்காக வரும் நான்கு பெண்கள், விடுதி அறையில் ஒன்றாக தங்குகின்றனர். அந்த நான்கு பேரில் ஒரு இஸ்லாமிய பெண், தன் அறையிலிருக்கும் மற்ற பெண்களிடம் இஸ்லாம் மதத்தின் மேன்மைகளை கூறி அவர்களில் இருவரை மதம் மாற்ற வைத்து விடுகிறார்.
@youtube
இதனை தொடர்ந்து ஆசிஃபா என்ற அந்த பெண் இஸ்லாம் மத அடிப்படைவாத கும்பலிடம் மதம் மாறிய இரண்டு பெண்களின் புகைப்படத்தை அனுப்ப, அந்த பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து, ஏமாற்றுவதாகவும், அதன் பின் ஷாலினி என்ற பெண் பாத்திமாவாக மாறி சிரியா செல்வதாகவும் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாத்திமா என்ற ஷாலினி சிரியாவிலுருந்து எப்படி தப்பினார், மற்றொரு இந்து பெண்ணிற்கு என்ன ஆனது என்பதே மீதி கதை.
வெறுப்பை உமிழும் படம்
இப்படத்தில் முழுக்க முழுக்க இஸ்லாம் மதத்தின் மீதான வன்மம், வலிந்து திணிக்கப்பட்டிருப்பதாக பல விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உண்மை சம்பவம் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாம் சமூகத்தையும் இழிவு படுத்தும் வகையில், படம் எடுப்பது தவறானது என தமிழ் சினிமாவில் வலது சாரி சித்தாந்தத்தில் படங்களை இயக்கி வரும் மோகன் ஜீ கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்தி ஊடகங்களும், திரை விமர்சகர்களும் இது மாதிரியான பிரச்சார நெடி மிகுந்த, மதவாதத்தை திணிக்கும் படங்கள் மிகவும் ஆபத்தானது என கருத்து தெரிவித்துள்ளனர்.
@youtubeWhat is this " The kerala story" is it the same as the famous obscene propaganda film "kashmir files" .
— pcsreeramISC (@pcsreeram) May 2, 2023
இதனை தொடர்ந்து பிரபல தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கேரளா ஸ்டோரி திரைப்படம், நச்சு தனமான அணுகுமுறை என டிரைலர் வெளியாகும் போதே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.