பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம்
palakkad student shoot classmate trying to recreate leo scene: கேரளாவின் பாலக்காட்டில், லியோ படம் பார்த்து அதை போல் ரீலிஸ் எடுக்க முயற்சித்த 9 ஆம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு வந்து சுட்டதில் சக மாணவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.
லியோ படம் பார்த்து துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தலா பருத்தூர் மேல்நிலைப் பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு வந்து தவறுதலாக சக மாணவர் ஒருவரின் தோள்பட்டையில் சுட்டுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியதில், லியோ படத்தில் விஜய் செய்வது போல் ரீல்ஸ் எடுப்பதற்கான முயற்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக the south first தெரிவித்துள்ளது.
சுமார் 10 நிமிட இடைவெளியில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முதல் குண்டு யாரையும் தாக்காமல் சுவரின் மீது பாய்ந்த நிலையில், இரண்டாவது குண்டு ஒன்றரை அடி தூரத்தில் இருந்த ஒரு மாணவரின் தோள்பட்டையில் பாய்ந்தது.
காயமடைந்த மாணவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஆரம்பத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மருத்துவமனை அறைக்கு மாற்றப்பட்டு குணமடைந்து வருகிறார்.
அந்தத் துப்பாக்கியானது, மாணவனின் தாத்தா காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்குப் பயன்படுத்திய பழைய, நாட்டுத் தயாரிப்பு 22 ரக கைத்துப்பாக்கி என காவல்துறை தெரிவித்தது.
அந்த ரிவால்வரில் 6 தோட்டாக்கள் கொள்ளளவு இருந்ததாகவும், மேலும் 12 தோட்டாக்கள் கையிருப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த கைத்துப்பாக்கி வீட்டில் அவரது தாயாரின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. அது வட இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதன் தோட்டா பஞ்சாபில் தயாரிக்கப்பட்டது.
கடந்த 25 ஆம் திகதி நள்ளிரவு பாலக்காடு சிறார் நீதி மன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, திருத்தலா டிசம்பர் 5 ஆம் திகதி வரை கோழிக்கோடு, வெள்ளிமடுக்குன்னுவில் உள்ள சிறார் இல்லத்திற்கு மாற்றியுள்ளனர்.
காயமடைந்த மாணவன் மற்றும் சக மாணவர்கள், துப்பாக்கியால் சுட்டதில் உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்ட மாணவரின் தாயாரான ஹஃப்சத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லியோ திரைப்படமானது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா ஆகியோரின் நடிப்பில் 2023 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது.