நாவூறும் சுவையில் கேரளா தேங்காய் சம்மந்தி: எப்படி செய்வது?
மட்டை அரிசியுடன் பிணைந்து சாப்பிடும் தேங்காய் சம்மந்தி கேரளாவில் மிகவும் பிரபலமானது.
புளிப்பு, காரம், இனிப்பு என புது விதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும் இந்த தேங்காய் சம்மந்தி.
அதே சுவையில், வீட்டிலேயே சுவையான கேரளா தேங்காய் சம்மந்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 6
- இஞ்சி- 1 துண்டு
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய்- 1
- சின்ன வெங்காயம்- 10
- புளி- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை நன்கு கலந்து உருட்டி வைத்தால் கேரளா சம்மந்தி தயார்.இதனை சுடு சாதத்தில் பிணைந்து சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |