நாவூறும் சுவையில் கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது: ரெசிபி இதோ
மீன் வறுவல் சாதாரணமாக சட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ மசாலவை தடவி அப்படியே வறுத்துதான் சாப்பிடுவோம்.
ஆனால் கேரளா ஸ்டைலில் மீன் பொளிச்சது என்று சொல்லப்படும் வாழை இலை மீன் வறுவல் சாப்பிடவே சுவையாக இருக்கும்.
அந்தவகையில், கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய மீன்- 1
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவாயான அளவு
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 2
- சின்ன வெங்காயம்- 10
- பச்சை மிளகாய்- 3
- கருவேப்பிலை- 1 கொத்து
- தக்காளி- 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- வாழை இலை- 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீன் சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் இதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கி தொக்கு போல் வந்ததும் அடுப்பை அனைத்து இறக்கிவைக்கவும்.
பின், ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இதில் மசாலா கலந்து வைத்துள்ள மீனை பொறித்து எடுக்கவும்.
அடுத்து ஒரு வாழை இலையை தீயில் வாட்டி அதில் வதங்கிய தக்காளி தொக்கு சேர்த்து அதில் பொரித்த மீன் வைத்து மடித்து கட்டவேண்டும்.
இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து மடித்து வைத்த வாழை இலையை எண்ணெயில் 10 நிமிடம் பொறித்து எடுத்தால் கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |