கேரள தம்பதியருக்கு 180 ஆண்டுகள் சிறை: அதிர்ச்சிப் பின்னணி
பெற்ற மகளை சீரழிக்க உதவிய தாய் உட்பட இரண்டு பேருக்கு கேரள நீதிமன்றம் ஒன்று 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
180 ஆண்டுகள் சிறை
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவரை விட்டுவிட்டு, தனது 11 வயது மகளுடன் வேறொரு ஆணுடன் மலப்புரம் என்ற ஊருக்கு ஓடிவந்துள்ளார்.

அங்கு ஒரு வாடகை வீட்டில் மூவரும் வாழ்ந்துவந்த நிலையில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், அந்த ஆண் அந்தச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அந்தச் சிறுமியின் தாயும் அதற்கு உடந்தையாக இருந்ததுடன், அந்தச் சிறுமியை தனது காதலர் துஷ்பிரயோகம் செய்வதற்கு முன் அவளுக்கு மதுவும் கொடுத்துவந்துள்ளார்.
தற்போது அந்தப் பெண்ணும் அவரது காதலரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் தலா 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இருவருக்கும் ஆளுக்கு 11.7 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால், அவர்கள் 20 ஆண்டுகள் கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |