கேரளாவை அதிரவைத்த சம்பவத்தில் வீடியோ வெளியிட்ட பெண் கைது! விசாரணை தீவிரம்
இந்திய மாநிலம் கேரளாவில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைரலான வீடியோ
கேரளாவில் பேருந்து பயணத்தின்போது தீபக் என்ற நபர் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்ற பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால், குறித்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து ஷிம்ஜிதா தலைமறைவானதாக கூறப்பட்டது.
யூடியூபர் பெண் கைது
அவர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஷிம்ஜிதா வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க Lookout நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஷிம்ஜிதாவை வடகராவில் அவரது உறவினர் வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
தற்போது அவர் கோழிக்கோட்டில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |