மகனைக் காண பிரித்தானியா வந்த கேரள பெண் திடீர் மரணம்: துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்
மகனைக் காண்பதற்காக கேரளாவிலிருந்து பிரித்தானியா வந்த பெண்ணொருவர் திடீரென மரணமடைந்ததால், அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மகனைக் காண்பதற்காக கேரளாவிலிருந்து பிரித்தானியா வந்த பெண்
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண், 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மாணவர் விசாவில் பிரித்தானியா வந்துள்ளார்.
எசெக்சில் வாழும் மகனைக் காண்பதற்காக, அவரது தந்தை உன்னிகிருஷ்னனும், தாயாகிய நிர்மலா உன்னிகிருஷ்ணனும் (65) பிரித்தானியா வந்துள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, டிசம்பர் 22 அன்று, நிர்மலா திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பம்
பிரித்தானியாவில் வாழும் மகனைக் காண்பதற்காக ஆசையுடன் வந்த தாய் உயிரிழந்ததால், அருண் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடலை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
நிர்மலா மாரடைப்பால் இறந்ததாக மருத்துவகளின் முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பில், இன்று நீதிமன்ற அதிகாரி விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |