கேரளாவில் திருமண நிச்சயம் செய்த தமிழக நபர் மரணம்: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் வருங்கால கணவர் உயிரிழந்ததால், தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
26 வயது இளம்பெண்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கும், கேரளாவின் கும்பளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் பிரஃபுல்லாவிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
காசர்கோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய மணி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பிரஃபுல்லா சோகத்தில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகிறது.
வருங்கால கணவரான மணி இறந்து இரண்டு வாரங்கள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பிரஃபுல்லா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரை உடலை மீட்ட பொலிசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில் வருங்கால கணவரின் அடக்கஸ்தலத்திற்கு அருகில், தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |