உடல் கொழுப்பை குறைக்க அறுவைசிகிச்சை: கை, கால் விரல்களை இழந்த பெண்
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் உடல் கொழுப்பை குறைக்க, அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது நோய்த்தொற்றுக்கு ஆளானார்.
அறுவை சிகிச்சை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரகத்தைச் சேர்ந்தவர் நீத்து (31). இவர் உடல் கொழுப்பைக் குறைக்க, கழகூட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த சிகிச்சை முடிந்து நீத்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டுள்ளது.
உடனே அவர் மருத்துவருக்கு போன் செய்து கூற, உப்பு கலந்த கஞ்சி மற்றும் தண்ணீரை குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதனை செய்த பின்னும் இரவில் நீத்துவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விரல்கள் அகற்றம்
அங்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளை காரணம் காட்டி, மருத்துவமனை மருத்துவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதுடன் உள் உறுப்புகளும் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக நீத்துவின் கையில் 4 விரல்களும், காலில் 5 விரல்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உடல் கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது நீத்துவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |