அரசின் தவறால் வேலையை இழந்த கேரள பெண்.., 6 வருடத்திற்கு பின் கிடைத்த நல்ல முடிவு
கேரள அரசின் நிர்வாக தவறு காரணமாக வேலையை தவற விட்ட பெண்ணுக்கு, 6 வருட சட்ட போராட்டத்திற்கு பின்பு அரசுப்பணி கிடைத்துள்ளது.
பெண்ணின் அரசுப்பணி
கேரள மாநிலம் கொல்லம் சாவரா பகுதியைச் சேர்ந்தவர் நிஷா பாலகிருஷ்ணன். கடந்த 2018 -ம் ஆண்டு கொச்சி மாநகராட்சியில் இளநிலை எழுத்தர் வேலைக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இது குறித்து மார்ச் 31 -ம் திகதி 2018 -ம் ஆண்டு வரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. பின்னர், நள்ளிரவு தாண்டி எர்ணாகுளம் மாவட்ட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இந்த தகவல் கிடைத்தது.
இதனால், 2015 -ம் ஆண்டு நடந்த அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் 696 -வது இடத்தை பிடித்த நிஷா பாலகிருஷ்ணனுக்கு வேலை கிடைக்கவில்லை.
6 ஆண்டுகளுக்கு பின்பு..
இதனைத்தொடர்ந்து, அரசின் நிர்வாக தவறு காரணமாக தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று 2018 -ம் ஆண்டு நீதிமன்றத்தில் நிஷா வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 6 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேபினட் அமைச்சரவை, அரசின் தவறை ஒப்புக்கொண்டு நிஷாவுக்கு அரசுப்பணி கிடைக்க முடிவு செய்துள்ளது.
கேரள அரசின் சிறப்பு அதிகாரமான 39 -வது விதியின் கீழ் சிறப்புப் பிரிவில், நிஷாவுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 வருடம் சட்ட போராட்டம் நடத்திய பிறகு நல்ல முடிவு கிடைத்துள்ளதால் நிஷா மகிழ்ச்சியில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |