Viral Video: சண்டா மேள இசைக்கு இணையாக வயலின் வாசித்து அசத்திய இளம்பெண்
கேரளாவில் சண்டா மேள இசைக்கு இணையாக இளம்பெண் வயலின் வாசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சண்டா மேள இசை
கேரளாவில் மிகவும் பிரபலமான சண்டா மேள இசையை இளம்பெண்கள் வாசிப்பது போலவும், சிறுவர்கள் இசைக்கு ஏற்ப நடனமாடுவது போலவும் இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
@twitter
தற்போது ஃபுயுசின் மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ள வீடியோ ஒன்று சண்டா மேளத்தோடு, வயலின் இசையை கலந்து புதுவித முயற்சியை எடுத்துள்ளது.
கேரளாவில் எந்த திருவிழா, நிகழ்ச்சியாக இருந்தாலும் சண்டா மேளம் இல்லாமல் நடக்காது.
இந்த நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
வைரலாகும் வீடியோ
கேரளாவில் நடைபெற்ற ஒரு திருவிழாவில், சென்னை மேள குழுவை சேர்ந்த கலைஞர் கரகாட்டக்காரன் படத்தில் பிரபலமான பாடலான ’மாங்குயிலே.. பூங்குயிலே..’ பாடலுக்கு இசையமைக்கிறார்கள்.
— സെബിച്ചൻ (@sebi_mathew) May 25, 2023
இந்த சண்டா மேளத்திற்கு ஏற்றார் போல் ஒரு இளம் பெண் வயலின் வாசிக்கும் வீடியோ, ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம் பெண் வயலின் வாசிக்கும் வீடியோவை பார்த்த அனைவரும் சமூக வலைதளங்களில், பெண்ணின் திறமையை பாராட்டி வருகின்றனர்.
நேற்று முன் தினம் செபி மேத்திவ் என்பவரால் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் இந்த வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள ஒருவர் ‘மிகவும் அருமையாக இருக்கிறது, அவ்வளவு சத்தமான சண்டா மேளத்திற்கு நடுவே, இந்த வயலின் இசை இவ்வளவு துல்லியமாக கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.