கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இளம்பெண் குற்றவாளி! நாளை தண்டனை அறிவிப்பு
இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் குளிர்பானத்தில் நஞ்சு கலந்து கொல்லப்பட்ட வழக்கில், அவரது காதலி மற்றும் மாமா குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குளிர்பானத்தில் நஞ்சு
கன்னியாகுமரி-கேரளா எல்லை பகுதியான பறைசாலை மூறியன்கரைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23).
இவரும் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டில் ஷாரோன் தனது காதலியைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர் வயிறு வலிப்பதாக, வெளியே நின்றிருந்த தன் நண்பரிடம் கூறியுள்ளார். மேலும் காதலை கிரீஷ்மா தனக்கு குடிக்க குளிர்பானமும், கசாயமும் கொடுத்தாக தெரிவித்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காதலி குற்றவாளி
இதனையடுத்து ஷரோனின் தந்தை அளித்த புகாரின் பேரில், காதலி கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உட்பட 4 பேர் பொலிஸார் விசாரணைக்கு ஆஜராகினர்.
அப்போது தனது திருமணத்திற்கு இடையூறாக இருக்கலாம் என கருதியதால், அவரை கொலை செய்ய குளிர்பானத்தில் நஞ்சு கலந்து கொடுத்ததாக கிரீஷ்மா கூறியது தெரிய வந்தது.
இந்த நிலையில் நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம், இளம்பெண் கிரீஷ்மா மற்றும் அவரது மாமா குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |