கொல்லைப்புறத்தில் திராட்சை விளைவித்து கோடியில் புரளும் கேரள இளைஞர்.. யார் அவர்?
சிறிய இடத்தில் சில குறிப்பிட்ட பயிர்களை போட்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் கேரள இளைஞரை பற்றி பார்க்கலாம்.
கேரள இளைஞர்
கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆஷால் (29). இவர் தனது வீட்டில் எக்ஸாடிக் பழங்களை இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கி தற்போது கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். ஹெல்த்கேர் நிறுவனத்தில் தொழில்முறை நிபுணரான இருந்த ஆஷால் பிஎச்சுக்கு, எக்ஸாடிக் பழங்களை பயிரிடுவதால் ஆர்வம் அதிகம்.
இவர், கொரோனா காலத்தில் வெளிநாட்டு பழங்களை பயிரிடும் பரிசோதனையில் இறங்கியுள்ளார். இது குறித்து ஆஷால் கூறுகையில், "உள்ளூர் நர்சரியில் மரக்கன்றுகளை வாங்கி மொட்டை மாடியில் நட்டேன். அது நல்ல விளைச்சலை கொடுத்ததால் தான் தனித்துவமான பழச் செடிகளை வளர்க்கத் தூண்டியது.
தனது வீடு இருக்கின்ற 5 சென்ட் நிலத்தில் பிரேசிலியன் பேஷன் ஃப்ரூட், மிராக்கிள் ஃப்ரூட், டிராகன் பழம் உள்பட பல வகைகளை பயிரிட ஆர்மபித்தேன். அதுவும் தேவையற்ற மரங்களை தனது வீட்டு முற்றத்தில் பயிரிடுவதில்லை. ஒவ்வொரு வகையிலும் ஒரு செடி மட்டுமே நடுவேன். அதில், சில பழங்கள் ஆண்டு முழுவதும் விளைகின்றன.
8 மாதங்களுக்கு முன்பு கம்போடிய காட்டு திராட்சை பழச் செடியை நட்டு, அதன் கொடி படர்வதற்கு ஒரு மரத் தட்டியைக் கட்டினேன். பின்பு, 2 மாதங்களுக்கு பிறகு பழம் முளைக்க தொடங்கியது. ஒவ்வொரு கொத்திலும் சுமார் 600 முதல் 1000 பழங்கள் காய்க்கும்.
தேங்காய் எண்ணெய் விற்று பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்தவர்.., எலி தொல்லையால் இவர் எடுத்த அந்த ஒற்றை முடிவு
பொதுவாக திராட்சை பழத்தின் சுவை புளிப்பு தன்மை கொண்டவை. ஆனால், இந்த காட்டு கம்போடியா வகையானது மிகவும் இனிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இதனால், இதன் விளைச்சலை காண விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், ஆர்வலர்கள் என் வீட்டுக்கு வருகின்றனர்" என்றார்.
கோடிக்கணக்கில் வருமானம்
தற்போது ஆஷாலிடம் கம்போடிய காட்டுத் திராட்சைகளைத் தவிர டெரெங்கானு செர்ரி, சன்ட்ராப், யூஜினியா புளோரிடா, டிராகன் பழம், அபியூ, ஊதா காடு கொய்யா, பராபா, மெடுசா அன்னாசி, ஜபோடிகாபா, சிவப்பு சுரினம் செர்ரி, பெர் ஆப்பிள் ரெட், பாஷன் ஃப்ரூட் மற்றும் மிராக்கிள் பழங்கள் உள்ளன.
இந்த பழங்கள் விற்பனையில் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மேலும், ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டுகிறார் ஆஷால்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |