லண்டனில் ஹொட்டலுக்காக 1500 கோடி செலவிட்டவர்... லுலு குழும நிறுவனர்: அவரது மொத்த சொத்து மதிப்பு
ஐக்கிய அமீரக நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான எம்.ஏ.யூசுப் அலி லண்டனில் மிக முக்கியமான வளாகம் ஒன்றை கைப்பற்றி அதை ஹொட்டலாக உருமாற்றியவர்.
லுலு குழுமத்தின் தலைவர்
ஐக்கிய அமீரக நாடுகளில் பிரபலமான லுலு குழுமத்தின் தலைவரான எம்.ஏ.யூசுப் அலி 2015ல் லண்டனில் அமைந்துள்ள முன்னாள் ஸ்காட்லாந்து யார்டு தலைமையகத்தை 1025 கோடி தொகைக்கு வாங்கினார்.
தொடர்புடைய கட்டிடத்தை 153 அறைகள் கொண்ட சொகுசு ஹொட்டலாக மாற்றினார். சுமார் 512 கோடி கூடுதலாக செலவிட்டு 7 மாடிகள் கொண்ட கிரேட் ஸ்காட்லாந்து யார்டு ஹொட்டல் என உருமாற்றினார்.
குறித்த ஹொட்டலானது 2019ல் திறக்கப்பட்டது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி 1973ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மாகாணத்திற்கு வேலை தேடி சென்றுள்ளார்.
தொடக்கத்தில் தமது உறவினர் நடத்தும் சிறு விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் தனியாக தொழில் செய்ய தொடங்கியுள்ளார். 1990களில் தனது முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட்டை திறந்துள்ளார் யூசுப் அலி.
272 கடைகள், வணிக வளாகங்கள்
லுலு குழுமத்தின் தற்போதைய வருவாய் 66,000 கோடி என்றே கூறப்படுகிறது. உலகின் 500 கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழும் யூசுப் அலி மத்திய கிழக்கு நாடுகளின் சில்லறை வர்த்தக மன்னராகவே அறியப்படுகிறார்.
அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 272 கடைகள் மற்றும் வணிக வளாகங்களை நடத்துகிறது. அபுதாபியின் அரச குடும்பம் 2020ல் இவரது லுலு குழுமத்தின் 20 சதவீத பங்குகளை 1 பில்லியன் டொலருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் லுலு குழுமம் இந்தியாவில் பல வணிக வளாகங்களைத் திறந்துள்ளது. ஸ்கொட்லாந்தில் செயல்படும் Waldorf Astoria ஹொட்டலும் லுலு குழுமத்திற்கு சொந்தமானது தான்.
இந்தியாவில் அதிகமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் நபர்களில் யூசுப் அலியும் ஒருவர். இவரது மொத்த சொத்து மதிப்பு 48,800 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |