வரலாற்று சாதனை படைத்த கேஷவ் மஹாராஜ்! சீன் வில்லியம்ஸ் அதிரடி சதம்..பரபரக்கும் டெஸ்ட்
புலவாயோ டெஸ்டில் ஜிம்பாப்பே அணி வீரர் சீன் வில்லியம்ஸ் அதிரடி சதம் விளாசினார்.
சீன் வில்லியம்ஸ் சதம்
ஜிம்பாப்பே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சைத் தொடர்ந்து ஜிம்பாப்பே முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், சீன் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடி 6வது சதத்தை பதிவு செய்தார்.
கேஷவ் மஹாராஜ்
அதே சமயம் கிரேக் எர்வினின் (36) விக்கெட்டை தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மஹாராஜ் (Keshav Maharaj) கைப்பற்றினார்.
இதன்மூலம் டெஸ்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
59 டெஸ்டில் (99 இன்னிங்ஸ்) அவர் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 11 முறை 5 விக்கெட்டுகளையும், ஒருமுறை 10 விக்கெட்டுகளையும் (ஒரே டெஸ்டில்) வீழ்த்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |