வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: தந்தையிடம் எழுப்பிய சந்தேகம்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், அந்தப் பெண் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக, கொல்லப்பட்ட நபர் தன் தந்தையிடம் ஏற்கனவே தெரிவித்தது தெரியவந்துள்ளது.
வருங்கால கணவனை கொலை செய்த பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.
அவர் கேத்தனை கொலை செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தந்தையிடம் எழுப்பிய சந்தேகம்
இந்நிலையில், சியா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கேத்தன் தன் தந்தையிடம் ஏற்கனவே கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கேத்தன் கொல்லப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்பு, தான் மொபைலில் அழைக்கும்போதெல்லாம் சியா யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாகவும், அவர் சேத்தன் சௌத்ரி என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதாகவும், தன் தந்தையிடம் கூறியுள்ளார் கேத்தன்.

அதாவது, சியாவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கலாம் என அவர் தன் தந்தையிடம் சந்தேகம் எழுப்பியுள்ளார் கேத்தன்.
பல முறை அவர் அது குறித்து தன் குடும்பத்தினரிடம் கூறியதாக, தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இந்த திருமண விடயத்தில், மணமக்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை கேட்டறிந்திருந்தால் இப்படி ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்திருக்காதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |