பிரித்தானியாவில் பரபரப்பு! இளம் பெண் கொலை, காதலன் தற்கொலை., புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ்
பிரித்தானியாவில் காதலியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட காதலனின் புகைப்படங்களை நார்தாம்ப்டன்ஷயர் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் உள்ள Slate Drive பகுதியில், 300,000 பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இரன்டு சடலங்களை பொலிஸார் கண்டெடுத்தனர்.
இறந்தவர்களை பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். ஒருவர் 41 வயது Benjamin Green என்றும் மற்றோருவர் 22 வயது Maddie என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் பெஞ்சமின், நீர் மேலாண்மை நிறுவனத்தில் மார்க்கெட்டிங் இயக்குநராகவும், குழந்தைகள் புற்றுநோய் தொண்டு அறங்காவலருமாக இருந்துள்ளார்.
அதேபோல், கேம்பிரிட்ஜ்ஷையரைச் சேர்ந்த மேடி, ஒரு சந்தைப்படுத்தல் நிர்வாகி மற்றும் திறமையான நடனக் கலைஞர், 'கனிவான, அக்கறையுள்ள மற்றும் சிந்தனைமிக்கவர்' என்று விவரிக்கப்பட்டார்.
இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏதும் இருந்ததாக அறியப்படவில்லை.
ஆனால், வீட்டில் உள்ள தடயங்களின்படி, பெஞ்சமின் தான் மேடியை கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
இதற்கிடையில், விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறியதாவது, பெஞ்சமின் 'திமிர்பிடித்தவர்' போன்று தோன்றியதாகவும், பெரும்பாலும் 20 வயதிற்குட்பட்ட 'குறைந்தது மூன்று காதலிகளை' கொண்டிருப்பதாகவும் கூறினர்.
ஆனால் ஒரு நண்பர் கூறுகையில்: 'பென் மற்றும் மேடி சுமார் இரண்டு வருடங்கள் ஒன்றாக இருந்தனர் மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டிற்கு விடுமுறையை கழிக்க சென்றிருந்தனர். பெஞ்சமின் வேலையில் பதவி உயர்வு பெற்றார்" என கூறியுள்ளார்.
இவர்களது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் நிலவிவரும் நிலையில், பொலிஸார் இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டு, தொடர்ந்து விசாணையில் ஈடுபட்டுள்ளனர்.

