18 ஆண்டுகளுக்கு பிறகு இடப்பெயர்ச்சியான கேது! 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகுது தெரியுமா?

Astrology Spiritual Ketu Peyarchi
By Kishanthini Apr 19, 2022 12:30 PM GMT
Report
Courtesy: oneindia

18 ஆண்டுகளுக்குப் பிறகு துலாம் ராசியில் இடப்பெயர்ச்சியாகியுள்ள கேதுவினால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது பயணம் செய்வதால் குடும்பத்தில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

வாழ்க்கைத் துணைவருக்கு லேசாக முதுகுவலி வந்து நீங்கும். பயமும் பதற்றமும் விலகும். எதிரிகள் தொல்லைகள் அகலும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். கேதுவினால் நல்ல செய்தி தேடி வரும்.

அரசு வேலை கிடைக்கும். அரசு, தனியார் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். பொறுப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். திருமணமாகி குழந்தைக்களுக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி நல்ல செய்தியை தரப்போகிறது.

ரிஷபம்

கேது பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செல்வதால் பிள்ளைகளால் சந்தோஷ செய்திகள் தேடி வரும். உறவுகளின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

செப்டம்பர் மாதம் வரை அலைச்சல் அதிகரிக்கும் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு கொள்வீர்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். கூட்டுத்தொழில் சிறப்படையும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்

கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற உங்களின் கனவு நனவாகும்.

வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வீண் வம்புகளில் இருந்து விலகிவிடுங்கள். சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போங்கள். உத்தியோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி நீங்கள் இருக்கும் இடம் தேடி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

கடகம்

சுக ஸ்தானத்தில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது பலமுறை யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

யாரையும் நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்களின் நீண்டகால லட்சியமான சொந்தவீடு கனவு இப்போது நிறைவேறும். ஆனாலும் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குவது நல்லது. பாதியிலேயே நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தாயாரின் உடல்நிலை சீராகும்.

உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் வந்து சேரும். குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரும்.

உறவினர்கள் வகையில் சின்னச்சின்ன சண்டைகள் வந்து நீங்கும் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடி வரும்.

வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். பழைய கடன் பிரச்சினைக்கு முடிவுக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.

கன்னி

தொழிலில் திறமை பளிச்சிடும். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவு அதிகமாக வந்தாலும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும்.

உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள். தூக்கமின்மை பிரச்சினை நீங்கும். வேலையில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினர் உங்களைப் பற்றி குறை சொல்ல தயாராகவே இருப்பார்கள்.

பண வரவு அதிகமாக வந்தாலும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும். உங்களின் உடல் நலனில் அதிக அக்கறை தேவை. தொழிலில் அகலக்கால் வைத்து அவதிப்பட வேண்டாம்.

துலாம்

உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வு கிடைக்கும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடப்போகிறீர்கள். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் காலமிது.

ஜென்ம ராசியில் அமர்ந்துள்ள கேது மனதை பக்குப்படுத்துவார். அரசாங்க ஆதாயம் உண்டு. தேவையற்ற விவாதங்களில் தலையிட வேண்டாம். வீடு மனை சொத்து வாங்குவீர்கள். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும்.

குடும்பத்தினருக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். வருமானம் அதிகரித்தாலும் கூடவே செலவுகளும் வந்து போகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

விருச்சிகம்

ஜென்ம கேதுவினால் சங்கடப்பட்ட உங்களுக்கு இனி சந்தோஷம் கிடைக்கப்போகிறது. விரைய ஸ்தான கேதுவினால் இனி தெளிவாக இருப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் தடைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

கோபம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுபகாரியங்களினால் மனதில் உற்சாகம் பிறக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உங்களின் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். அலுவலகத்தில் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

தனுசு

லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேதுவினால் தடைபட்ட வேலைகள் தடைகள் நீங்கி மளமளவென நடைபெறும். ஆறு மாதங்கள் வரைக்குமே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. 2023 ஜூன் மாதத்திற்குப் பிறகு அக்டோபர் மாதம் வரைக்கும் கேதுவின் பயணம் சாதகமாக உள்ளதால் நோய் பற்றி அச்சம் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.

மகரம்

பத்தாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். வேலையில் திறமை பளிச்சிடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேசுவதை தவிர்க்கவும்.

அலுவலகத்தில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். வீடு நிலம் வாங்கலாம். சகோதரர்கள் கூட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். கூடுதல் சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெரிய அளவில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.

கும்பம்

கேது பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் 18 மாதங்களும் வெற்றிகள் தேடி வரப்போகிறது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும்.புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். தடுமாற்றம் நீங்கும் தெளிவு பிறக்கும்.

பண வரவு அதிகரிப்பதால் பற்றாக்குறை நீங்கும் சேமிப்பு அதிகரிக்கும். வருட பிற்பகுதியில் சிறு சிறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். சுப விரைய செலவுகள் வந்து செல்லும். மொத்தத்தில் இந்த கேது பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்தப்போகும் கிரகப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

மீனம்

கேது பகவான் ராசிக்கு எட்டாவது வீட்டிற்கு மாறியுள்ளதால் அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களின் கவனம் தேவை. என்றாலும் இனி வரும் காலங்களில் சிக்கல்கள் நீங்கி மன நிம்மதி அதிகரிக்கும்.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடல் சோர்வும் அவ்வப்போது மன உளைச்சலும் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமையும் உண்டாகும். மன தடுமாற்றம் இருந்தாலும் சில நேரங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். திடீர் செலவுகளால் சேமித்த பணம் கரையும். ஒருவித பயமும் பதற்றமும் வந்து நீங்கும்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US