நாளை நடக்கப்போகும் கேது பெயர்ச்சி 2022! இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

astrology Horocopes Spirtual
By Kishanthini Apr 11, 2022 01:05 PM GMT
Report

 கேது 18 ஆண்டுகளுக்குப் பிறகு துலாம் ராசிக்கு 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி மாலை 3.27 மணிக்கு மீண்டும் செல்கிறார்.

கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும்.

இந்தநிலையில் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு வருவதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் எதிர்பாராத பல இனிமையான பலன்களை தரப் போகிறார். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் வெற்றிகரமாக முடியும். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அதிகப் பணத்தை யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க அல்லது வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், இப்பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.

உங்களின் ரகசியமான எதிரிகள் இக்காலத்தில் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். தாய்வழியில் இருந்து விரும்பத்தகாத செய்திகள் கிடைக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் செல்வதற்கான யோகம் உண்டு.

மிதுனம்

மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எந்த ஒரு பணியிலும் வெற்றி கிடைக்கும்.

பிள்ளைகள் தொடர்பான கவலைகள் தொந்தரவு தரலாம். காதல் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், வேலையில் முழு கவனத்தை செலுத்த முயலுங்கள். இக்காலத்தில் உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்கப்படும். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

பணியிடத்தில் இடமாற்றத்திற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக் குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இருப்பினும், எவ்விதமான குடும்ப தகராறும ஏற்பட அனுமதித்துவிடாதீர்கள். முக்கியமாக பொருட்கள் திருடு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் கேது இந்த ராசிக்காரர்களின் தைரியத்தையும் வலிமையையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணிகளும் அனைவராலும் பாராட்டப்படும். நீங்கள் ஒருமுறை என்ன முடிவெடுத்தாலும் அதை முடித்த பிறகு விட்டுவிடுவீர்கள்.

வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மேலும் கேது பகவான் இக்காலத்தில் வேலையில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திடீர் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். நிலம், சொத்து சம்பந்தமான விஷயங்களிலும் சில சச்சரவுகள் வரலாம். பணியிடத்திலும் சதியால் பலியாகாமல் கவனமாக இருங்கள்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல இனிமையான பலன்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் சிறிது மன உளைச்சலை சந்திக்க நேரிடும். வியாபார ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.

இக்காலத்தில் நீங்கள் உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டுசெயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் ஏதேனும் ஒரு டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதில் நல்ல பலனை கேது வழங்குவார்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். பல விரும்பத்தகாத மற்றும் எதிர்பாராத செய்திகள் உங்களை தொந்தரவு செய்யலாம். தேவையற்ற வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

குடும்ப ஆரோக்கியத்திற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் இழுபறி மற்றும் நிலுவையில் இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் எந்த முடிவையும் மிகவும் கவனமாக இருங்கள்.

தனுசு

தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் மிகவும் இனிமையானதாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலம். இக்காலத்தில் எந்த வகையான போட்டியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். சுப காரியங்களுக்கு அதிக செலவு செய்யக்கூடும். புதிய உறவுகள் கிடைக்கும். பணியிடத்தில், உயர் அதிகாரிகளுடனான உறவு பலப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ள மக்களுடன் தொடர்பு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். எவ்வளவு தான் வெற்றியை பெற்றாலும், குடும்பத்தில் சச்சரவுகள் மற்றும் மன உளைச்சல்களை சந்திக்க வேண்டி வரும்.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் நற்பலன் கிடைக்கும்.

உங்கள் திறமை மற்றும் தைரியத்தினால், கடினமான சூழ்நிலைகளையும் எளிதாகக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள்.

மீனம்

மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் இக்காலத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் முடிவும் மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். பணியிடத்தில் சதியால் பலியாகிவிடாதீர்கள். கவனமாக இருங்கள். உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.   

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US