திடீர் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர்! 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்வதாக உருக்கம்
கெவின் ஓ பிரையன் 266 சர்வதேச போட்டிகளில் விளையாடி 5850 ஓட்டங்களும், 172 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்
அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் கெவின் ஓ பிரையன் (153)
அயர்லாந்து கிரிக்கெட் அணி வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் வீரரான கெவின் ஓ பிரையன், 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
PC: Getty
இவர் 153 ஒருநாள் போட்டிகளிலும், 110 டி20 போட்டிகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த நிலையில் 38 வயதாகும் கெவின் ஓ பிரையன் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' 16 ஆண்டுகள் மற்றும் எனது நாட்டிற்காக 389 போட்டிகளில் விளையாடி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிக்கிறேன். அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று நான் நம்பினேன்.
PC: Twitter
ஆனால், கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு தேர்வு செய்யப்படாததால் தேர்வாளர்களும், நிர்வாகமும் வேறு எங்கும் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நான் அயர்லாந்திற்காக விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து மகிழ்ந்தேன், ஆடுகளத்தில் பல நண்பர்களை உருவாக்கினேன். மேலும், தேசிய அணிக்காக விளையாடியதில் இருந்து நினைவில் கொள்ள பல மகிழ்ச்சியான நினைவுகள் உள்ளன.
PC: Getty
இது இப்போது எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திலும், எனக்கான எனது தொழில் வாழ்க்கையிலும் உள்ளது. நேரம் சரியானது, இங்கு அயர்லாந்தில் எனது சொந்த பயிற்சி அகாடமியை தொடர்ந்து வளர்க்க விரும்புகிறேன், எதிர்காலத்தில் எனக்கு சில உற்சாகமான வாய்ப்புகள் வரவுள்ளன.
மேலும் வெளிநாட்டில் பயிற்சி அனுபவத்தை தொடர்ந்து பெற விரும்புகிறேன், மேலும் சில சர்வதேச மற்றும் சில வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.