உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியை இங்கே நடத்தியிருக்கலாம்! கெவீன் பீட்டர்சன் போட்ட பதிவு
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி குறித்து டுவிட் செய்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டனில் கடந்த 18-ஆம் திகதி துவங்கியது.
ஆனால், முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க, இரண்டாம் நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக பாதியிலே நிறுத்தப்பட, மூன்றாம் நாள் ஆட்டமும் நேற்று ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இதை சொல்வதற்கு எனக்கு வேதனையாக உள்ளது.
நம்பமுடியாத முக்கியமான போட்டி இங்கிலாந்தில் நடத்தி இருக்க கூடாது என்னை பொருத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஒரு முக்கியமான போட்டி இதனை துபாயில் நடத்தியிருக்க வேண்டும்.
பொதுவான இடம், நட்சத்திர மைதானம், நல்ல சீதோஷண நிலை, பயிற்சி வசதிகள், விமானம் மையம், ஐசிசி தலைமையகம் என அனைத்தும் அங்கு உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.