பிரித்தானியா நம்பமுடியாத இடம்! அரச குடும்பத்தை நினைத்து.. ஜூபிலி கொண்டாட்டம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், ஜூபிலி கொண்டாட்டம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பிளாட்டினம் ஜூபிலி விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகால சிம்மாசன ஆட்சிப் பொறுப்பை குறிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Photo Credit: Leon Neal/Getty Images/Europe
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், ஜூபிலி கொண்டாட்டத்தில் மூன்று விடயங்களை தாம் கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
I watched a lot of the #JubileeCelebration yesterday and noted 3 things:
— Kevin Pietersen? (@KP24) June 3, 2022
• Britain is an incredible place to live.
• we should be very proud of the Royal family.
• nowhere can do a day like yesterday any better, than all our service men/women who were part of the show.
??
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பிரித்தானியா வாழ்வதற்கு ஏற்ற நம்பமுடியாத இடமாக உள்ளது. அரச குடும்பத்தை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
விழாவில் சேவை பணியாற்றிய நம் ஆண்கள் மற்றும் பெண்களால் சிறப்பான நாளாக நேற்று விளங்கியதை வேறு எங்கும் பார்க்க முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.
Photo Credit: file image/Faheem Hussain/Sportzpics