இந்தியாவை ஜெயிக்கனும்னா... இங்கிலாந்து இதை செய்யனும்! தைரியமாக கூறிய இங்கிலாந்து முன்னாள் வீரர்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ஜெயிக்க வேண்டும் என்றால், சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
லார்ட்ஸ் டெஸ்டில் ஜெயித்ததால், இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 25-ஆம் திகதி துவங்கவுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவீன் பீட்டர்சன் கூறுகையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பல மாற்றங்களை செய்யவே விரும்புவேன்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் மிக மிக மோசமாக உள்ளது. லார்ட்ஸ் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிக மிக மட்டமாக இருந்தது.
41வயதாகும் நான் பந்துவீசினால் கூட இங்கிலாந்து வீரர்களை விரைவாக விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று தோன்றும் அளவிற்கு இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.
என்னை பொறுத்தவரையில் டேவிட் மாலன், லியம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுப்பதே இங்கிலாந்து அணிக்கு பயனளிக்கும். மூன்று வீரர்களுமே தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சொதப்பி வரும் வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அப்போது தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.