மழையால் பாதிக்கப்படும் உலகக்கோப்பை போட்டிகள்! கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்
ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஏன் இந்த உலகக்கோப்பையை நடத்த முடியவில்லை என கெவின் பீட்டர்சன் கேள்வி
அவுஸ்திரேலியாவில் ஒரே நாளில் மழையால் ரத்தான இரண்டு போட்டிகளால் ரசிகர்கள் ஆதங்கம்
அவுஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளை ஏன் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்த முடியவில்லை என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஆனால் சில ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று நடக்க இருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து, இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிகள் கைவிடப்பட்டன.
Twitter (@ICC)
இவ்வாறாக, இதுவரை மூன்று ஆட்டங்கள் நாணய சுழற்சி செய்யப்படாமல் ரத்தாகியுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இதுகுறித்து கூறுகையில்,
'இந்த டி20 உலகக்கோப்பையை ஏன் ஜனவரி /பிப்ரவரியில் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய சூரிய ஒளியில் விளையாட முடியவில்லை? யாருக்காவது தெரியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
Twitter (@ICC)