கே.எல்.ராகுலின் ஆட்டம் ரொம்ப சலிப்பு - கெவின் பீட்டர்சன் கிண்டல்
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலின் ஆட்டம் ரொம்ப சலிப்பாக உள்ளது என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து விமர்சனத்தில் சிக்கும் கே.எல்.ராகுல்
நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வெற்றி ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் தற்போது 2வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் மிகப் பொறுமையாக விளையாடினார். இதனால் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இது குறித்து கே.எல். ராகுல் நான் ஏன் மெதுவாக விளையாடினேன் என்பது குறித்து விளக்கம் கொடுத்தார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நான் பில்டிங் செய்யும் போது என் அணி வீரர்கள் என்னை பந்தால் தாக்கினார்கள். எனவே நான் கேப்டனாக ஏதோ அவர்களுக்கு தவறு செய்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார்.
கெவின் பீட்டர்சன் கிண்டல்
இந்நிலையில், கே.எல்.ராகுலின் விளையாடும் விதத்தை குறித்து இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் நேரலையில் பேசுகையில்,
பவர் ப்ளேயில் கே.எல்.ராகுல் விளையாடியது நான் பார்த்ததிலேயே மிகவும் சலிப்பான விஷயம் என்று கிண்டலடித்து பேசினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலர் இணையதளங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.