தமது அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜெய்ஸ்வாலை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்
ராஜ்கோட்டில் சதம் அடித்த ஜெய்ஸ்வாலை இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.
அவர் 104 ஓட்டங்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ஏற்கனவே ஜெய்ஸ்வால் இரண்டாவது டெஸ்டில் 209 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
@AP
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்ஸ்வாலை வாழ்த்தியுள்ளார்.
@AFP/Punit Paranjpe
அவரது பதிவில், 'இந்திய சூழ்நிலையில் ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தில் ஒரு பலவீனத்தையும் நான் காணவில்லை. வெளிநாட்டு மண்ணில் ரன் குவிப்பதுதான் அவருக்கு பாரிய சவால். உங்கள் கிரிக்கெட் வாழ்வின் முடிவில் சிறந்த வீரராக இருப்பீர்கள் மற்றும் வெளிநாட்டு மண்ணில் எந்த சூழலிலும் நீங்கள் சதம் அடிப்பீர்கள்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களாக ஜெய்ஸ்வாலை மிக உன்னிப்பாகப் பார்த்தால், அவர் எல்லா இடங்களிலும் 100 ஓட்டங்களைப் பெற முடியும். ஒருநாள் அவர் சிறப்பான வீரராக விளங்குவார் என்று நினைக்கிறேன்!' என தெரிவித்துள்ளார்.
@BCCI/X
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |