பிரித்தானியா முழுவதும் இதை கொண்டுவாருங்கள் ரிஷி சுனக்! நான் முழுமையாக ஆதரிக்கிறேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
இங்கிலாந்து பாடசாலைகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
செல்போன்கள் தடை
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் செல்போன்கள் தடை செய்யப்பட உள்ளன. இதற்கான புதிய சட்டத்தினை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்க உள்ளார்.
உயர்நிலை பாடசாலை மாணவர்களில் 29 சதவீதம் பேர், செல்போன் பயன்படுத்தக் கூடாத நேரத்தில் பயன்படுத்துவதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளை சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த தடையை கோருகிறது.
கெவின் பீட்டர்சன் ஆதரவு
மேலும், நாள் முழுவதும் பாடசாலைகளில் மாணவர்களின் நடத்தையை மேம்படுத்துவதற்கும், கவனச்சிதறலை தவிர்க்கவும் இடைவேளை நேரம் உட்பட செல்போன்களை தடை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செல்போன்களை பாடசாலைகளை தடை செய்வதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன்! குழந்தைகள் சாதனங்களால் தொலைந்து போகிறார்கள். இந்த போர்வை விதியை பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் கொண்டு வாருங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
I support this FULLY! Kids are being lost to their devices. @RishiSunak please make this a blanket rule across EVERY school in the UK! 🇬🇧 pic.twitter.com/mFXMhgi7CB
— Kevin Pietersen🦏 (@KP24) February 19, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |