இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது இந்த அணி தான்! முன்னாள் வீரரின் கணிப்பு
சிட்னியில் நடந்த அரையிறுதியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் - கெவின் பீட்டர்சன்
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் மோதும் என்று நினைப்பதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த 153 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.
இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் இடையில் நிலவுகிறது.
AP/Rick Rycroft
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது கணிப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது டிவீட்டில், 'இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நினைக்கிறேன். என் விருப்பப்படி நான் கணித்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Reuters