கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே முக்கிய அறிவிப்பு! மேலும் இரு நாட்டு எல்லையை ஒரு மாதம் மூடி வைக்க உத்தரவு
உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் பெப்ரவரி 21-ஆம் திகதி வரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கமும் பாதிப்பும் அதிகரித்த நிலையில் கனடா- அமெரிக்க எல்லையானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், வர்த்தக மற்றும் அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில், ஜனவரி 21-ஆம் திகதி வரை எல்லையை மூடிவைப்பதாக அறிவித்திருந்த கனடா அரசு, அந்த கால வரையறை முடிவதற்கு 1 வாரத்திற்கு முன்னரே, இப்போது மேலும் ஒரு மாதத்திற்கு கனடா-அமெரிக்கா எல்லையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையை நீட்டிக்க முடிவெடுத்துள்ளது.
இதனால், உலகின் மிக நீண்ட இரு நாட்டு எல்லைப்பகுதியான கனடா-அமெரிக்கா எல்லை வரும் பெப்ரவரி 21-ஆம் திகதி வரை மூடப்படுவதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
"இது ஒரு முக்கியமான முடிவு, மேலும் எல்லையின் இருபுறமும் உள்ள மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலையில் இரு நாடுகளும் பிடிபட்டுள்ள நிலையில், கனடாவில் இதுவரை 17,000க்கும் அதிகமானோர் மற்றும் அமெரிக்காவில் 375,000க்கும் அதிகமானோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.