KFC ஸ்டைல் மொறுமொறு பாப்கார்ன் சிக்கன்: ரெசிபி இதோ
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு தான் இந்த KFC பாப்கார்ன் சிக்கன்.
இந்த KFC பாப்கார்ன் சிக்கனை கடைகளில் வாங்கி உண்டால் குறைந்தது 500 ரூபாய் செலவழிக்கவேண்டும்.இந்த பாப்கார்ன் சிக்கனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
சுவையான மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் எப்படி எளிதாக வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்
- சிக்கன் - கால் கிலோ
- மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கு
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மிளகாய் பொடி -தேவைக்கு
- சில்லி ஃப்ளேக்ஸ்- தேவைக்கு
- கறிவேப்பிலை ஃப்ளேக்ஸ் – தேவைக்கு
- மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
- முட்டை – ஒன்று
- மைதா மாவு – கைப்பிடியளவு
- சோள மாவு - கைப்பிடியளவு
செய்முறை
எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மைதாவுடன் சோளமாவைக் கலந்து இரண்டாக பிரித்து அதில் ஒரு மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
RECIPE30
முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்.
பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும். பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும்.பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும்.
பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும். பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |