KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்.. இவ்வளவு ஈஸியா
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு தான் இந்த KFC சிக்கன்.
இந்த KFC சிக்கனை கடைகளில் வாங்கி உண்டால் குறைந்தது 500 ரூபாய் செலவழிக்கவேண்டும். இந்த சிக்கனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும், ஆசை தீரவும் சாப்பிட முடியும். KFC சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 500 கிராம் (பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
- மைதா - 1 கப்
- சோள மாவு - 1/2 கப்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பிரட்டுவதற்கு
- பேக்கிங் பவுடர் - 1/2டீஸ்பூன்
- பூண்டு பவுடர் - 1டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
- உலர்ந்த தைம் இலை - 2 டீஸ்பூன்
- உலர்ந்த ஆரிகனோ - 2 டீஸ்பூன்
- உலர்ந்த துளசி - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - 2 டீஸ்பூன்
- சிக்கன் ஸ்டாக் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
- கடுகுத் தூள் - 2 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு
- சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை - 1
செய்முறை
சிக்கனை முதலில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சையின் தோலை அப்படியே போட்டு, அதில் குளிர்ந்த நீரை சிக்கன் மூழ்கும் அளவில் ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு ஊறியவுடன் அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு அகலமான தட்டில் மைதா, சோள மாவு, உப்பு,மசாலா பொடிகள், மூலிகைகள் மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து கிளறி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் குளிர்ந்தநீரை எடுத்துக்கொண்டு சிக்கன் துண்டுகளை குளிர்ந்த நீரில் 5 வினாடி வைத்திருந்து பின் அந்த மைதா கலவையில் பிரட்டி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.இதேபோல் அனைத்து சிக்கன் துட்டுகளையும் மைதா கலவையில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை 7 நிமிடத்திற்கு பொறித்து நன்கு வெந்தவுடன் எடுத்தால் சுவையான KFC சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |