பிரபல இயக்குநரின் 4 வயது மகன் லிஃப்ட்டில் சிக்கி உயிரிழப்பு
பிரபல இயக்குநர் கீர்த்தன் நடகவுடாவின் 4 வயது மகன் லிஃப்ட்டில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கீர்த்தன் நடகவுடா
யாஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படம், இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கிய KGF பாகம் 1, KGF பாகம் 2, சலார் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் கீர்த்தன் நடகவுடா(kirtan nadagouda).
மைத்ரி மூவி மேக்கர்ஸின் கீழ் பிரசாந்த் நீலுடன் தற்போது ஒரு திகில் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கீர்த்தன் நடகவுடாவின் குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கீர்த்தன் நடகவுடா, சம்ரிதி பட்டேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. அதில், 4 வயதான சிரஞ்சீவி சோனார்ஷ்(Chiranjeevi Sonarsh) மூத்த மகன் ஆவார்.
லிஃப்ட்டில் சிக்கி 4 வயது மகன் உயிரிழப்பு
இந்நிலையில், 4 வயதான சிரஞ்சீவி சோனார்ஷ் வெகு நேரமாக லிஃப்ட்டில் சிக்கியுள்ளார். வெளியே இருந்தவர்கள் எவ்வளவோ காப்பாற்ற முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

கீர்த்தன் நடகவுடாவின் 4 வயது மகன் உயிரிழந்துள்ள துயர சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
దర్శకుడు శ్రీ కీర్తన్ నాదగౌడ కుమారుడి దుర్మరణం మనస్తాపం కలిగించింది
— Deputy CMO, Andhra Pradesh (@APDeputyCMO) December 15, 2025
తెలుగు, కన్నడ భాషల్లో దర్శకుడిగా పరిచయమవుతున్న శ్రీ కీర్తన్ నాదగౌడ కుటుంబంలో చోటు చేసుకున్న విషాదం ఎంతో ఆవేదనకు లోను చేసింది. శ్రీ కీర్తన్, శ్రీమతి సమృద్ధి పటేల్ దంపతుల కుమారుడు చిరంజీవి సోనార్ష్ కె.నాదగౌడ…
மகனை இழந்த கீர்த்தன் நடகவுடாவிற்கு திரைத்துறையினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |