35 ரூபாய்க்கு இரும்பு பட்டறையில் வேலை பார்த்தவர்.. இன்று 500 கோடி வசூல் படத்தின் இசையமைப்பாளர்!
KGF CHAPTER 2 படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இரும்பு பட்டறையில் வேலை பார்த்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான KGF CHAPTER 2 உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திரைப்படம் இதுவரை 500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். இவரது இசை வெகுவாக பாராட்டப்பட்டது. இவரை பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரவி பஸ்ரூர் கொரோனா lockdown சமயத்தில் இரும்பு பட்டறை ஒன்றில் 35 ரூபாய்க்கு வேலை பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் குண்டாபுராவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ரவி பஸ்ரூர், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் சிற்பங்களை வடிவமைக்கும் தொழிலை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.