300 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிவந்தவர்! இன்று 700 கோடி வசூல் படத்தின் நாயகன்
உலகளவில் பிரபலமாகியிருக்கும் கேஜிஎஃப் நடிகர் யாஷின் இளம் வயது வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் கடந்த 14 ஆம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா ஆகும். மைசூரை சேர்ந்த நடிகர் யாஷ் சிறிய வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகராக உருவாக வேண்டும் என்று விரும்பினாராம்.
பள்ளிப் பருவத்தில் என்னவாக ஆகப்போகிறாய் என்று ஆசிரியர் கேட்டதற்கு யாஷ் நான் நடிகராவேன் என்றுதான் பதிலளிப்பாராம். இந்தப் பதிலைக் கேட்ட மற்ற மாணவர்கள் அவரைக் கிண்டல் செய்துள்ளனர்.
கல்லூரி பருவத்திலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிய யாஷ் தொடர்ந்து தனது சினிமா ஆசையை பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதை அவர்கள் விரும்பாததால் 300 ரூபாயுடன் மைசூரில் இருந்து பெங்களூருவிற்கு வந்த யாஷ் அங்குள்ள நாடக கம்பெனி ஒன்றில் பேக் அப் மேனாக பணியாற்றத் துவங்கியுள்ளார்.
அதாவது அந்த நாடகக் கம்பெனியிலும் யாஷிற்கு பெரிய வேடங்கள் எதுவும் கிடைக்காமல் தினம்தோறும் நடைபெற இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களையும் அவர் கற்றுக் கொண்டிருக்கிறார்.
காரணம் நாடகத்தில் நடிக்கப்போகும் ஏதோ ஒரு நபர் திடீரென்று வரவில்லையென்றால் அவர்களுக்குப் பதிலாக யாஷ் நடித்திருக்கிறார். இப்படியே பல்வேறு தடைகளைத் தாண்டிவந்த யாஷ் சினிமாவிலும் பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி இன்று பெரும் புகழை அடைந்துள்ளார்.
கேஜிஎஃப்2 திரைப்படம் தற்போது வரை உலகளவில் கிட்டத்தட்ட ரூ 720 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.