ரூ 171 கோடி இழப்பீடு கேட்டு ட்ரம்ப் நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்த காஸா ஆதரவு மாணவர்
ட்ரம்ப் நிர்வாகத்தால் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மற்றும் பாலஸ்தீனிய ஆர்வலர், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 20 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக
பல்கலைக்கழக வளாகப் போராட்டங்களில் மஹ்மூத் கலீல் முக்கிய பங்கு வகித்ததற்காக ட்ரம்ப் அரசாங்கம் அவரை நாடு கடத்த முயன்றது. பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார், தீங்கிழைக்கும் வகையில் வழக்குத் தொடரப்பட்டு, யூத விரோதி என்று முத்திரை குத்தப்பட்டார்.
இந்த நிலையில் கலீல் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள சட்டத்தரணிகள், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை மற்றும் வெளிவிவகார அமைச்சகம் ஆகியோரையும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த கலீல், கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.
ட்ரம்ப் நிர்வாகத்தால் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட மாணவர்களில் அவர் மிகவும் பிரபலமானவராக மாறிவிட்டார். மேலும், கலீலின் கைது நடவடிக்கை பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையாக பரவலாக பார்க்கப்பட்டது.
வெறுக்கத்தக்க நடத்தை
கலீல் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை, மேலும் அவரது நாடுகடத்தல் வழக்கு இன்னும் குடிவரவு நீதிமன்றத்தில் தொடர்கிறது. ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கலீலை யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டினர், இருப்பினும் அவர் மீது எந்த ஆதாரத்தையும் அவர்களால் வழங்க முடியவில்லை.
இந்த நிலையில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், கலீலின் 20 மில்லியன் டொலர் அல்லது ரூ 171 கோடி இழப்பீடு கோரிக்கை என்பது அபத்தமானது என்று குறிப்பிட்டார்,
மேலும் யூத மாணவர்களை அச்சுறுத்தும் வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் பரப்புரை மேற்கொண்டவர் என்று கலீல் மீது குற்றம் சாட்டினார். இதனிடையே, இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வ கோரிக்கையின் குறிக்கோள் என்பது, அவரை அச்சுறுத்தி அமைதிப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டவே என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |