உண்மையான கனேடியர்கள் நாங்கள்... உள்ளூர் மக்களை மிரட்டும் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் கனேடிய மக்களை வந்தேறிகள் என குறிப்பிட்டுள்ளதுடன் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விடுங்கள் என மிரட்டியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய மக்களுக்கு எதிராக
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட Nagar Kirtan என்ற ஊர்வலத்தின் போதே, காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் கனேடிய மக்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
இந்த காணொளியானது தற்போது சமூக ஊடக பக்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் பாடல்கள் ஒலிக்க பலர் மெதுவாக ஒரு திசையில் அணிவகுத்துச் செல்கின்றனர்.
பலர் காலிஸ்தான் ஆதரவு கொடியை ஏந்தியுள்ளனர். அதில் ஒருவர், கனடாவில் குடியிருக்கும் வெள்ளையர்கள் வந்தேறிகள் என குறிப்பிட்டுள்ளதுடன், உண்மையான கனேடியர்கள் நாங்களே என்றார்.
இங்கிலாந்துக்கு செல்லட்டும்
வெள்ளையின கனேடியர்கள் இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லட்டும் என்றும் அதில் அவர் குறிப்பிடுகிறார். கனேடிய மக்கள் பலர் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.
ஐரோப்பாவுக்கும் இஸ்ரேலுக்கும் நாங்கள் ஏன் செல்ல வேண்டும் என்றும் பல கனேடியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியா கனடா இடையே கடும் மோதல் போக்கு உருவாகியுள்ள நிலையிலேயே இப்படியான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |