இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம்: பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களுக்கு எதிராக சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் நிலைமையை சீர்குலைக்க முயன்றனர்.
இந்திய தேசிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் கொடியை அசைத்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் இரு தரப்பினரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது.
KHALISTAN ZINDABAD Drowns Out “Bharat Mata Ki Jai”:
— Zaryab Ali (@zaryabali720) August 15, 2025
SFJ’s Pro-Khalistan Sikhs Confront Modi’s Violent Hindutva Foot Soldiers at Indian Embassy – Melbourne pic.twitter.com/T35ymjnUJk
பிறகு பொலிஸாரின் தலையீட்டுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இந்திய துணை தூதரகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் போரோனியாவில் உள்ள இந்து கோவிலில் கிராஃபிட்டி வரைந்து அடையாளம் தெரியாத வெறுப்புணர்வை விதைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |