மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து கனடாவில் பேரணி - ஹிந்துக்களை நாடு கடத்த கோரிக்கை

Narendra Modi Hinduism Canada
By Karthikraja May 05, 2025 12:51 PM GMT
Report

 கனடாவில் 18.6 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். இதில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹிந்துக்கள் ஆவார்கள்.

ஹிந்துக்களை நாடு கடத்த வலியுறுத்தல்

இந்நிலையில், கனடாவில் உள்ள ஹிந்துக்களை நாடு கடத்துமாறு காலிஸ்தான் அமைப்பினர் பேரணி நடாத்தியுள்ளனர். 

anti hindu parade by khalistan in canada

இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவபொம்மையை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பது போன்று சித்தரித்து, ஒரு வாகனத்தில் வைத்து பேரணியில் கொண்டு சென்றுள்ளனர்.

ஹிந்து அமைப்பு கண்டனம்

காலிஸ்தான் அமைப்பினரின் இந்த செயலுக்கு கனடிய ஹிந்து வர்த்தக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "கனடாவில் 800,000 ஹிந்துக்களும் 18.6 லட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர்.

தற்போது ஹிந்துக்களை குறிவைத்து பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான போராட்டத்துக்கு அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

கனடாவில் காலிஸ்தான் செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு இந்திய அரசு தான் காரணம் என முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு குற்றம்சாட்டியது.

இதனையடுத்து, இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களை காலிஸ்தான் அமைப்பினர் முன்னெடுத்தனர். 

khalistan parade canada

இதனால், கட்சிக்குள் ஆதரவை இழந்த ட்ரூடோ, பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜிநாமா செய்தார். இதனையடுத்து, கடந்த வாரம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவி ஏற்றார்.

இந்தியா உடனான உறவு சீரடையும் என கார்னி கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரான பேரணியை நடத்தியுள்ளனர். 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US