கனடாவில் இந்திய வம்சாவளியினர் வீட்டின்மீது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கிச்சூடு
கனடாவில், கோவில் ஒன்றின் நிர்வாகியாகிய இந்திய வம்சாவளியினர் ஒருவர் வீட்டை நோக்கி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
இந்திய வம்சாவளியினராகிய கோவில் நிர்வாகி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சர்ரேயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்துவருகிறார் இந்திய வம்சாவளியினரான சதீஷ் குமார்.
சதீஷ் குமார், லக்ஷ்மி நாராயண் கோவில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். புதன்கிழமை காலை 8.00 மணியளவில் சிலர் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Image: SOURCED/CNN-News18
சுமார் 14 குண்டுகள் சுடப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிசார், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால், அந்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என மறுநாள் காலை தகவல் வெளியானது.
எதற்காக சதீஷ் குமார் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இதற்கிடையில், கனடாவில், இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்துக் கோவில்களைக் குறிவைத்து தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
The president of a major Hindu temple, Satish Kumar of Lakshmi Narayan Mandir in Surrey, Canada, was attacked by Khalistani supporters. His house was targeted with at least 14 rounds fired last night.@RishabhMPratap with the latest updates. pic.twitter.com/jLZvvi58ld
— TIMES NOW (@TimesNow) December 29, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |