ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்... சீக்கியர்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாதி எச்சரிக்கை
சீக்கியர்கள் எவரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில்
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பண்ணுன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே, சீக்கியர்கள் நவம்பர் 19ம் திகதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏர் இந்திய விமானங்களை நவம்பர் 19ம் திகதி இயக்க அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அன்றைய நாள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பிக்கும் எனவும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் பண்ணுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில், நவம்பர் 19ம் திகதி தான் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியும் முன்னெடுக்கப்படுகிறது. பண்ணுன் மிரட்டல் விடுவது இது முதன்முறையல்ல, செப்டம்பரில், இந்து-கனடியர்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு அவர் வலியுறுத்தினார்.
கனேடிய குடிமக்களுக்கும்
காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே தூதரக மோதல்கள் இறுகியிருந்த வேளை அது.
இதனையடுத்து கனடாவில் செயல்படும் இந்து மன்றம் சார்பான சட்டத்தரணிகள் குழு ஒன்று கனடிய குடிவரவு அமைச்சரிடம் பன்னுன் கனேடிய எல்லைக்குள் நுழைவதைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
பண்ணுன் விடுத்துள்ள மிரட்டல், கனடாவில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமல்ல, கனேடிய குடிமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்து மன்றம் குறிப்பிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |