பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு
பிரித்தானியாவின் லண்டனிலுள்ள இந்திய உயர் கமிஷன் கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலிஸ்தான் போராட்டக்காரர்கள்
பிரித்தானியாவின் லண்டனிலுள்ள இந்திய உயர் கமிஷன் கட்டிடத்தில்(Indian High Commission ) சிலர் கும்பலாக வந்து ஜன்னல்களை உடைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டரின் ஆல்ட்விச்சிலுள்ள கட்டிடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்
இதனை தொடர்ந்து காவல் துறையினர் அங்கு வருவதற்கு முன்பு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
@twitter
சேதமடைந்த கட்டிடம் சமூக ஊடங்களில் ஒரு சிலர் மஞ்சள் நிறத்திலிருந்த காலிஸ்தான் பாதகைகளை கையில் வைத்துக் கொண்டு இந்திய உயர் கமிஷன் முன் போராட்டக்காரர்கள் கோசமெழுப்பியுள்ளனர்.
@google
இதனை தொடர்ந்து ஒருவர் உள்ளே சென்று கட்டிடத்திலிருந்த இந்திய தேசிய கொடியை கழற்றிக் கொண்டிருப்பதைப் போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இரண்டு பாதுகாவலர்கள் காயமடைந்ததாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சீக்கிய பிரிவினைவாதிகள்
அவர்கள் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று நம்பப்படுவதாக PA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்துப் பதிலளித்த லண்டன் மேயர் சாதிக் கான், "நடந்த வன்முறை சீர்குலைவு மற்றும் நாசவேலைகளை" கண்டிப்பதாக கூறினார்.
@twitter
இது போன்ற நடத்தைக்கு எங்கள் ஊரில் இடமில்லை என அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ் இந்த சம்பவத்தை "அவமானகரமானது" மற்றும் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விவரித்துள்ளார்.
UK ?: BUNCH OF KHALISTANIS TAKE DOWN INDIAN NATIONAL FLAG AT THE INDIAN HIGH COMMISSION. #Khalistan #Punjab #AmritpalSingh #India pic.twitter.com/7rfuAAcqkf
— Arunima Dey (@ArunimaDey17) March 19, 2023
விம்பிள்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, தான் "திகைத்து போயிருப்பதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பை அரசாங்கம் "தீவிரமாக" எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.