போர் தாக்குதலில் உக்ரைன் முன்னேற்றம்! ரஷ்யாவை தடுக்க செய்த சம்பவம்... பிரித்தானியா முக்கிய தகவல்
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள முக்கிய நகரை உக்ரைன் படையினா் மீட்பதற்கான பதிலடித் தாக்குதல் நடவடிக்கை முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்த தகவலை பிரித்தானியா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் உளவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான கொ்சானில் முக்கியத்துவம் வாய்ந்த அன்டோனிவ்ஸ்கி பாலத்தை உக்ரைன் படையினா் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா்.
இதில், அந்தப் பாலம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. ரஷ்யப் படையினருக்கு வீரா்களையும் ஆயுதங்கள், உணவுகள் உள்ளிட்ட பொருள்களையும் கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
Alexander Ermochenko/Reuters
இதன் தொடா்ச்சியாக, கொ்சான் நகரை மீட்கும் உக்ரைன் படையினரின் நடவடிக்கை முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பகுதியில் உக்ரைன் கை மீண்டும் ஓங்குவது இந்த போரில் ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.